உயிரோடு இருக்கும்போதே இறுதிச் சடங்கு விருந்துக்கு அழைப்பு விடுத்த முதியவர்

0
20

உத்தர பிரதேச மாநிலம் ஆரையா பகு​தி​யைச் சேர்ந்த முதி​ய​வர் ராகேஷ் யாதவ் (65). சொந்த நிலம் இல்​லாத காரணத்தால் இவருக்கு திரு​மணம் ஆகவில்​லை.

இவரது இரு சகோ​த​ரர்​களும் இறந்து விட்​டனர். இவருக்கு திருமணம் ஆகாத ஒரு சகோ​தரி மட்​டும் உள்​ளார். இவரது முன்னோர்​கள் வசித்த வீட்​டை​யும், உறவினர் ஒரு​வருக்கு வழங்கிவிட்டு, கூடாரத்​தில் ராகேஷ்யாதவ் வசித்து வரு​கிறார். சொந்​தம், பந்​தம் இல்​லாமல் சோகத்​துடன் வாழ்ந்து வந்த ராகேஷ் யாதவுக்​கு, தான் இறந்துவிட்​டால், தனக்கு ஈமச் சடங்கு நிகழ்ச்சிகள் எல்​லாம் நடத்​து​வதற்கு ஒரு​வரும் இல்​லையே என்ற ஏக்​கம் ஏற்​பட்​டது.

அதனால் தான் உயிரோடு இருக்​கும் போதே, இறப்​புக்கு பின் அளிக்​கப்​படும் விருந்து நிகழ்ச்​சியை (பந்​தா​ரா) நடத்த விரும்பினார். இதற்​காக அழைப்பிதழ் அச்​சிட்டு 1,900 பேருக்கு அழைப்பு விடுத்​தார். இதில் பலர் கலந்து கொண்​டனர். ஈமக்​கிரியை பூஜைக்​குப்​ பின் அனை​வருக்​கும் விருந்து பரிமாறப்பட்டது.

இது குறித்து ராகேஷ் கூறுகை​யில், “எனக்கு உறவினர் யாரும் இல்லை. அதனால் நான் உயிரோடு இருக்​கும்​போதே பந்​தாரா நடத்​த விரும்​பினேன்​” என்​றார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here