17கே தொழில்​நுட்​பத்​தில் அதி நவீன டிஜிட்​டல் கேமரா – ஒளிப்​ப​தி​வாளர் வேல்ராஜ் அசத்​தல்

0
17

தமிழ் சினி​மா​வின் முன்​னணி ஒளிப்​ப​தி​வாளர் வேல்ராஜ். வெற்​றி​மாறனின் ‘பொல்​லாதவன்’, ‘ஆடு​களம்’, ‘வட சென்​னை’, ‘அசுரன்’, ‘விடுதலை’ உள்பட பல படங்​களுக்கு ஒளிப்​ப​திவு செய்துள்ள இவர், தனுஷின் ‘வேலை​யில்லா பட்ட​தா​ரி’, ‘தங்கமகன்’ ஆகிய படங்​களை இயக்கி உள்​ளார்.

இவர் இப்​போது, பிளாக்​மேஜிக் அர்சா சினி 17கே 65 எம்எம் (Blackmagic URSA Cine 17K 65mm) என்ற அதீத திறன் கொண்ட நவீன டிஜிட்​டல் கேம​ராவை வாங்கி இருக்​கிறார்.

இந்​தி​யா​விலேயே, குறிப்​பாகத் தமிழ் சினி​மா​வில் இந்த 17கே தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​தும் முதல் ஒளிப்பதி​வாளர் வேல்​ராஜ் என்​கிறார்​கள். இதுபற்றி வேல்​ராஜிடம் கேட்​ட​போது, “இது, சாதாரண கேம​ராக்​களை விட பல மடங்கு அதிக தெளிவு மற்​றும் ஆழமான காட்​சிகளை வழங்​கும். இது தமிழ் சினிமாவின் மேக்​கிங்கை உலகத் தரத்​துக்கு உயர்த்​தும் முயற்​சி” என்​றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here