கொலை வழக்கில் 14 பேரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து: மீண்டும் தண்டனை விதித்த ஐகோர்ட்

0
13

15 ஆண்​டு​களுக்கு முன்பு நடந்த கொலை வழக்​கில் 14 பேரை விடு​தலை செய்து கீழமை நீதி​மன்​றம் பிறப்​பித்த தீர்ப்பை ரத்து செய்​துள்ள உயர் நீதி​மன்​றம், தற்​போது உயிருடன் உள்ள 9 பேரை​யும் குற்​ற​வாளி​களாக அறி​வித்து உத்​தர​விட்​டுள்​ளது.

திரு​வான்​மியூர் ரங்​க​நாத​புரத்​தைச் சேர்ந்த ரவி என்​பவரைக் கொலை செய்த வழக்​கில் தொடர்​புடைய சின்​னையா என்ற ஏழு​மலையை ஒரு கும்​பல் கடந்த 2010 ஜூன் 14 அன்று அவரது வீட்​டின் முன்​பாக வெட்டி படுகொலை செய்​தது.

இந்த கொலை தொடர்​பாக திரு​வான்​மியூர், துரைப்​பாக்​கம் மற்​றும் பல்​ல​வன் சாலை பகு​தி​யைச் சேர்ந்த சரவணன், கந்​தகு​மார், ஸ்டீபன்​ராஜ், சந்​துரு, குரு, அப்பு என்ற அப்​புனு, கிருஷ்ணகு​மார், புஷ்ப​ராஜ், குரு​மூர்த்​தி, னி​வாசன் என்ற ஹரிஹரன், நாக​ராஜன், தாமு என்ற தாமோதரன், லட்​சுமி, செல்வி உள்​ளிட்ட 16 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை சென்னை 7-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது. விசா​ரணை​யின்​போது 2 பேர் இறந்​த​தால் அவர்​கள் மீதான வழக்கு கைவிடப்​பட்​டது. இந்​நிலை​யில் கொலைக்குற்றம் சந்​தேகத்​துக்கு இடமின்றி நிரூபிக்​கப்​பட​வில்லை எனக்​கூறி எஞ்​சிய 14 பேரை​யும் விடு​தலை செய்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்​பளித்​தது.

மேல்முறையீடு இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எம்​.ஜோ​தி​ராமன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது.

அப்​போது அரசு தரப்​பில் கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, இந்த வழக்​கில் குற்​றச்​சாட்டை நிரூபிக்​கும் வகை​யில் 18 சாட்​சி​யங்​கள், 41 சான்று ஆவணங்​கள் சமர்ப்​பிக்​கப்​பட்​டும், கீழமை நீதி​மன்​றம் அவற்றை கருத்​தில் கொள்​ள​வில்​லை.

கொலையைக் கண்​ணால் பார்த்த ஏழு​மலை​யின் மனைவி மற்​றும் குழந்​தைகளின் சாட்​சி​யங்​களை​யும் கீழமை நீதி​மன்​றம் கவனிக்க தவறி​யுள்​ளது. பழிக்​குப்​பழி​யாக நடந்த இந்த கொலை சம்​பவத்​தில் குற்​றம்​சாட்​டப்​பட்ட அனை​வரை​யும் கீழமை நீதி​மன்​றம் விடு​தலை செய்​திருப்​பது தவறானது என வாதிட்​டார்.

குற்​றம் ​சாட்​டப்​பட்​ட​வர்​கள் தரப்​பில், நடந்த கொலைக்​கும் தங்​களுக்​கும் எந்த சம்​பந்​த​மும் இல்லை என்​றும், அரசு தரப்பு சாட்​சிகள் இறந்த நபரின் குடும்ப உறுப்​பினர்​கள் எனவும் வாதிடப்​பட்​டது. இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், இந்த வழக்​கில் கொலையை நேரில் பார்த்த ஏழு​மலை​யின் மனைவி மற்​றும் குழந்​தைகளின் வாக்​குமூலங்​கள் நம்​பகத்​தன்மை வாய்ந்​தவை.

சில முரண்​பாடு​கள் இருப்​ப​தைக் காரணம் காட்டி திட்​ட​மிட்டு நடத்​ தப்​பட்ட ஒரு கொலை சம்​பவத்​தில் ஈடு​பட்​ட​வர்​களை ஒட்​டு மொத்​த​மாக விடு​தலை செய்​திருப்​பதை அனு​ம​திக்க முடி​யாது. இந்த மேல்​முறை​யீட்டு வழக்கு விசா​ரணை​யின்​போது குற்​றம்​சாட்​டப்​பட்ட கந்​தகு​மார், குரு, கிருஷ்ணகு​மார், புஷ்ப​ராஜ், தாமு ஆகியோர் இறந்து விட்​ட​தால் அவர்​கள் மீதான வழக்கு கைவிடப்​படு​கிறது. எஞ்​சிய 9 பேரை​யும் குற்​ற​வாளி​களாக தீர்​மானிக்​கிறோம்.

இந்த வழக்கு விசா​ரணைக்கு நேரில் ஆஜராகி​யுள்ள ஸ்டீபன்​ராஜ், சந்​துரு ஆகிய இரு​வருக்​கும் ஆயுள் தண்​டனை மற்​றும் தலா ரூ. ஆயிரம் அபராதம் விதிக்​கிறோம். எஞ்​சிய 7 பேரை​யும் போலீ​ஸார் பிப்​.16 அன்று நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தும் வகை​யில் பிடி​வாரன்ட் பிறப்​பிக்​கிறோம்.

அன்​றைய தினம் அவர்​களுக்​கான தண்​டனை விவரங்​கள் அறிவிக்​கப்​படும், என உத்​தர​விட்​டுள்​ளனர். 15 ஆண்​டு​களுக்கு முன்பு நடந்த கொலை வழக்​கில் விடு​தலை செய்​யப்​பட்ட அனை​வரை​யும் குற்​ற​வாளி​களாக அறி​வித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்டு இருப்​பது பரபரப்பை ஏற்​படுத்தி உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here