நாகர்கோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி

0
342

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் ராஜ் (வயது 41), காவலாளி. எட்வின் ராஜிடம் இடலாக்குடி பகுதியை சேர்ந்த தொழிலாளியான கனகசபாபதி (52) அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 6 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து எட்வின்ராஜ் தனது நண்பர் ஜெகனுடன் சென்று கனகசபாபதியிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்களை கனகசபாபதி தாக்கியது தெரிகிறது. இதுகுறித்து எட்வின்ராஜ் கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் கனகசபாபதி மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here