Home சினிமா செய்திகள் புதுமுகங்களின் ‘பேய் கதை’!

புதுமுகங்களின் ‘பேய் கதை’!

0

அறிமுக இயக்குநர் ஜுன் மோசஸ் எழுதி இயக்கும் படம் ‘பேய் கதை’. இதில் வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், சுமந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

பிரவீன் எஸ்.ஜி. ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு போபோ சசி இசையமைக்கிறார். ஜெர்ரிஸ் ஜர்னி இன்டர்நேஷனல் புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் படத்தைத் தயாரிக்கும் ஜெர்ரி கூறும்போது, “கிரிக்கெட் விளையாடச் செல்லும் நண்பர்கள் எதிர்பாராத சூழல் ஒன்றில் சிக்குகிறார்கள். அவர்கள் அதிலிருந்து தப்பினார்களா, இல்லையா? என்பது கதை.

தமிழில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருந்தாலும் அதிலிருந்து மாறுபட்டதாக இது இருக்கும்” என்று தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version