5 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து நொய்டா பெண்ணிடம் ரூ.1.40 லட்சம் பறித்த கும்பல்

0
260

நொய்டா 77-வது செக்டாரில் வசிக்கும் ஸ்மிருதி செம்வேலை கடந்த 8-ம் தேதி பிரியா சர்மா என்ற பெண் செல்போனில் தொடர்பு கொண்டு சைபர் கிரைம் பிரிவில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.

அப்போது, ஸ்மிருதியின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி ஆட் கடத்தல், போதை கடத்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை போன்றவற்றில் ஈடுபட்டுள்ளதாக பிரியா சர்மா கூறியுள்ளார். அதை கேட்டு ஸ்மிருதி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின்னர், தொடர்ந்து மிரட்டிய படியே 5 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து ரூ.1.40 லட்சத்தை பறித்துள்ளனர்.

அதன்பிறகுதான் தன்னை மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளதை உணர்ந்து போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இத்தகவலை போலீஸ் அதிகாரி கிருஷ்ண கோபால் சர்மா தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here