Home விளையாட்டு செய்திகள் “சிக்ஸர் அடிப்பதிலேயே கவனம் இருக்கிறது” – சொல்கிறார் சூர்யவன்ஷி

“சிக்ஸர் அடிப்பதிலேயே கவனம் இருக்கிறது” – சொல்கிறார் சூர்யவன்ஷி

0

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் முலான்​பூரில் நடை​பெற்ற எலிமினேட்​டர் ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி தகுதி சுற்று 2 ஆட்​டத்​துக்கு முன்​னேறியது ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி. அந்த அணி​யின் வெற்​றி​யில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்​துகளில், 12 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 97 ரன்கள் விளாசி முக்​கிய பங்கு வகித்​தார்.

இந்த ஆட்​டத்​தின் போது அதிவேக ஐபிஎல் சதம் அடிக்​கும் சாதனையை நூலிழை​யில் சூர்​ய​வன்ஷி தவற​விட்​டார். எனினும் ஓர் சீசனில் அதிக சிக்​ஸர்​கள் அடித்த கிறிஸ் கெய்​லின் சாதனையை முறியடித்​து, 65 சிக்​ஸர்​களை விளாசி சாதனை படைத்​தார் சூர்​ய​வன்​ஷி. இதனால் சூர்​ய​வன்​ஷியை தற்​போது கிரிக்​கெட் விமர்​சகர்​கள் ‘யுனிவர்​சல் பேபி பாஸ்’ என அழைக்​கத் தொடங்கி உள்​ளனர்.

சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்னர் வைபவ் சூர்​ய​வன்ஷி கூறிய​தாவது: ஐபிஎல் தொடரில் அதிவேக சாதனையை தவற​விட்​டது போட்டி முடிந்த பிறகே எனக்குத் தெரிய​வந்​தது. என் கவனம் முழு​வதும் சிக்​ஸர் அடிப்பதிலேயே இருந்​தது. எதிர்​காலத்​தில் கூட நான் சதங்​கள் அடிப்​பேன். தற்​போதைய சூழ்​நிலை​யில் அணி​யின் ரன்​களை அதி​கப்​படுத்​து​வதே எனது முதன்மை நோக்​க​மாக இருந்​தது. நான் எனது திட்​டத்​தின்​படி மட்​டுமே செயல்​படு​கிறேன், அதில் ஏதேனும் குறை​கள் இருந்​தால், அவற்​றைச் சரிசெய்ய முயற்​சிப்​பேன்.

பந்​து​வீச்​சாளர்​களை எவ்​வாறு எதிர்​கொள்​வது என்​பதை ஆராய்கிறேன் மற்​றும் எல்​லைக் கோட்​டின் தூரத்​தைக் கணிக்கவும் முயற்சி செய்​கிறேன். நான் சிறந்த ஆட்​டத்​திறனை வெளிப்​படுத்​தும்​போது, பந்​து​வீச்​சாளர் அழுத்​தத்​திற்கு உள்ளாகிறார். அடுத்த போட்​டி​யிலும் சிறப்​பாகச் செயல்பட முயற்சிப்​போம். நான் பந்​து​வீச்​சாளர்​களைப் பற்றி அதி​கம் சிந்திப்​ப​தில்​லை, எனது இயல்​பான ஆட்​டத்தை விளை​யாடவே முயற்சி செய்​கிறேன். இவ்​வாறு வைபவ்​ சூர்​ய​வன்​ஷி கூறி​னார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version