Home விளையாட்டு செய்திகள் முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல்

முதல் ஒருநாள் போட்டியில் இன்று இந்தியா – இங்கிலாந்து மோதல்

0

 இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 4-0 என வென்றது. இதில் முதல் போட்டி மழை காரணமாக ரத்தாகி இருந்தது. டி 20 தொடரை அடுத்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ளன.

இதன் முதல் போட்டி பர்மிங்காமில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. டி 20 தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்ல வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்குகிறது. சீனியர் நட்சத்திரங்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பது பலம் சேர்க்கக்கூடும். கேப்டன் ஷுப்மன் கில், அனுபவம் வாய்ந்த கே.எல்.ராகுல் ஆகியோரும் பேட்டிங்கில் கூடுதல் பலம் சேர்க்கக்கூடும்.

இங்கிலாந்து அணி கடந்த ஜனவரி 27-ம் தேதிக்கு பின்னர் தற்போதுதான் ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. பேட்டிங்கில் ஜோ ரூட், கேப்டன் ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜாஸ் பட்லர், பென் டக்கெட், டாம் பேன்டன் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், ஜோஷ் டங் வேகக்கூட்டணி இந்திய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க ஆயத்தமாக உள்ளது. இந்த போட்டியை சோனி நெட்வொர்க் நேரலை செய்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version