123 சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்​லெஸ்’

0
10

மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் மத எல்​லைகளைத் தாண்​டி, பெண்​கள் வளர்ச்​சிக்​காகத் தன்​னலமற்ற சேவை​களை செய்​தவர், கன்​னி​யாஸ்​திரி ராணி மரி​யா. அவர் வாழ்க்​கைச் சம்​பவங்​களை மையப்​படுத்தி உரு​வாகி​யுள்ள படம், ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்​லெஸ்’ (முகமற்​றவரின் முகம்).

ட்ரை லைட் கிரியேஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்​படம், 2024ம் ஆண்டு ஆஸ்​கர் விருதுக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டது. 123-க்​கும் மேற்​பட்ட சர்​வ​தேச விருதுகளை வென்ற இப்​படத்​தில், வின்சி அலாய்​சி​யஸ், சோனாலி மொஹந்​தி, ஜீத் மத்​தா​ரு, அஜிஸ் ஜோசப் நடித்​துள்​ளனர். 136 நிமிடங்​கள் ஓடும் இப்​படம் இந்​தி, மலை​யாளம், தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழில் நவ.21ம் தேதி வெளி​யாகிறது.

ஷைசன் பி.உசுப் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு மகேஷ் ஆனே ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். ஜெய​பால் ஆனந்​தன் கதை, வசனம் எழு​தி​யுள்ள இப்​படத்தை சான்றா டிசூசா ராணா தயாரித்​துள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here