கட்சி நிர்வாகியை தற்கொலைக்கு தூண்டியதாக காங். எம்எல்ஏ, 3 பேர் மீது வழக்கு

0
176

கேரளாவில் வயநாடு மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக இருந்த எம்.எம்.விஜயன் (78) தனது மகன் ஜிஜேஷ் (38) உடன் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சுல்தான் பத்தேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஐ.சி.பாலகிருஷ்ணன் தொடர்புடையை கூட்டுறவு வங்கி வேலை ஊழல் காரணமான விஜயன் தற்கொலை செய்து கொண்டதாக ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது. கூட்டுறவு வங்கிகளில் வேலை வாங்கித் தருவதாக விஜயன் பணம் வசூலித்து எம்எல்ஏ பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரிடம் கொடுத்ததாகவும் ஆனால் அவ்வாறு வேலை வழங்கப்படாததால் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் விஜயன் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில் விஜயனை தற்கொலைக்கு தூண்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஐ.சி. பால கிருஷ்ணன், வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.டி.அப்பச்சன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு முன் விஜயன் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here