Home சினிமா செய்திகள் “அந்தக் குரல்தான் கடவுள்” – ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் தனுஷ்

“அந்தக் குரல்தான் கடவுள்” – ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் தனுஷ்

0

நடிகர் தனுஷ், தனது பிறந்த நாளை கடந்த 28-ம் தேதி கொண்டாடினார். அதை முன்​னிட்டு அவரது நற்​பணி மன்​றம் சார்பில், வேல்ஸ் மருத்​து​வ​மனை மற்​றும் கல்​லூரி வளாகத்​தில் ரத்​த​தான முகாம் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில் ஏழை எளிய மாணவர்​கள் 150 பேருக்கு கல்வி ஊக்​கத்​தொகை, 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்​பத்​துக்கு 30 ஆட்டோக்களை தனுஷ் வழங்​கி​னார்.

பின்​னர் ரசிகர்​களிடையே அவர் பேசும்​போது கூறிய​தாவது: “நம் வாழ்க்​கை​யில நிறைய பிரச்​சனை வரும். நிறைய நல்​லது கெட்டது வரும். நல்​ல​வங்க யாரு, கெட்​ட​வங்க யாரு, எதிரி யாரு, முதுகுல குத்​துறவன் யாருன்னு தெரி​யாது. நிறைய மன உளைச்சல் வரும். அன்​றாட வாழ்க்​கையே குழப்​பமா இருக்​கும். இஎம்ஐ கட்​டுறதுல இருந்து ஸ்கூல் பீஸ் கட்​டுற வரைக்​கும் எவ்வளவோ பிரச்​சினை​கள். அதை எல்​லாம் எப்​படி சமாளிக்​கிறது ? ஒண்​ணு, மனவலிமை, மன திடம். இன்​னொன்னு உடல் ஆரோக்கி​யம்.

உடல் ஆரோக்​கி​யத்​துக்கு என்ன பண்​ணணும் ? வொர்க் அவுட் பண்​ணுங்க, பத்​தி​யமா சாப்​பிடுங்க, ஜிம்​முக்கு போங்க. போக முடி​யாதவங்க வாக்​கிங் போங்க. சும்மா ஒரு இடத்​துல உட்காரவே, உட்​கா​ராதீங்க. வீட்ல இருக்​குற எல்லா வேலை​யும் இழுத்து போட்டு செய்​யுங்க, அதுவே பெரிய வொர்க் அவுட் தான். உங்க பசங்​களுக்​கும் அதையே சொல்லி கொடுங்க. சின்ன வயசுல இருந்தே முயற்சி பண்​ணுங்க. வீட்டு சாப்​பாடு சாப்பிட வைங்க. ஃபாஸ்ட் ஃபுட் சாப்​பிட வைக்​காதீங்க.

அதை எல்​லாம் விட முக்​கி​யம், குழந்​தைங்க கையில மொபைலையோ, ஐபேடையோ கொடுக்​காதீங்க. அதை ​விட மோச​மான ஒரு செயல் கிடை​யாது. அது அவங்க மூளை வளர்ச்சியையே பாதிக்​கும். குழந்​தைகளை ஓடி ஆடி விளை​யாட வையுங்க. மன ஆரோக்​கி​யத்​துக்கு தியானம் பண்​ணுங்க. இதை சாதா​ரணமா நினைச்சி​டாதீங்க. உங்க வாழ்க்​கையே மாத்​தி, நல்ல வழி​யில கொண்​டும் செல்​லும் சக்தி அதுக்கு உண்​டு. உங்க சாமி ரூம்ல உட்​காருங்க, கண்ணை மூடுங்க. ஒரு குரல் கேட்​கும்.

அந்த குரல் என்​னென்​னவோ பேசும், பேசட்​டும், பேச விடுங்க. சில மாதங்​கள்ல, அந்த குரல் ஓய்ந்​ததுக்கு அப்​புறம் அமைதி வரும். அந்த அமை​தி​யில ஒரு குரல் தீர்க்​க​மா, திவ்​ய​மா, அசரீரி மாதிரிகேட்​கும். அந்த குரல் உங்​களை அறப்​படுத்​தும், நெறிப்படுத்​தும், ஒழுங்​குபடுத்​தும். உண்​மை​யான வழி​யில கொண்டு போகும்.

நல்​ல​வங்க, கெட்​ட​வங்க யாருன்னு உங்​களுக்கு காட்​டும். உங்க பிரச்​சினை​களுக்​கான தீர்வு எல்​லாம் தானா உங்க மனசுல தோணும். அப்ப புரி​யும், எண்​ணம் போல் வாழ்க்​கை. எண்​ணம் போல்தான் வாழ்க்​கைன்னு அந்த குரல் சொல்​லும். அந்த குரல்தான் கடவுள். இவ்​வாறு நடிகர் தனுஷ் கூறி​னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version