Home சினிமா செய்திகள் சிக்​னலில் நடக்​கும் பிரச்சினையை சொல்​லும் ‘சிக்னல் அட் 11.30’

சிக்​னலில் நடக்​கும் பிரச்சினையை சொல்​லும் ‘சிக்னல் அட் 11.30’

0

சந்​தோஷ் பிர​தாப், பவ்யா த்ரி​கா, பூஜிதா பொன்​ன​ாடா, ஜெயப்​பிர​காஷ், முனீஷ்​காந்த் உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘சிக்​னல் அட் 11.30’. மலர்​விழி நடேசன் இயக்​கி​யுள்ள இப்​படத்தை அவரும் ஷிவானி சுப்​ரமணி​யும் தயாரித்​துள்​ளனர். ராஜா பட்​டாச்​சா​ரியா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். டி இமான் இசையமைத்​துள்​ளார்.

இப்​படம் குறித்து மலர்​விழி நடேசன் கூறும்​போது, “இது நான் இயக்​கி​யுள்ள 2-வது திரைப்​படம். ‘திரு​வாளர் பஞ்​சாங்​கம்’ என்ற காமெடி படத்தை ஏற்​கெனவே இயக்கி இருக்​கிறேன். தனிப்​பட்ட ஒரு நபரின் வாழ்க்​கை​யில் 11.30 மணிக்கு ஒரு சிக்​னலில் நடக்​கும் பிரச்​சினை​தான் ‘சிக்​னல் அட் 11.30’ படத்​தின் கதை. ஹீரோவுக்கு ஒரு நொடி​யில் நடந்த சம்​பவம், அவர் வாழ்க்​கையை மொத்​த​மாக மாற்​றி​விடு​கிறது.

அது என்ன என்று திரைக்​கதைச் செல்​லும். குடும்​பத்​துடன் பார்க்கக் கூடிய பொழுது​போக்கு படம். எல்​லோரும் சந்தித்திருக்கக் கூடிய ஒரு சம்​பவம் என்​ப​தால், பார்வையாளர்கள் கதை​யுடன் எளி​தில் ‘கனெக்ட்’ ஆவார்​கள். இதில் மெசேஜ் எதுவும் சொல்லவில்லை. படம் முடிந்து வெளி வரும்​போது, பார்வையாளர்கள் எதை எடுத்​துக் கொள்​கிறார்​களோ அது​தான் மெசேஜ்.

இந்​தக்​ கதைக்​கு அன்​பு, கோபம்​ நிறைந்​த ஹீரோ தேவைப்பட்டார்​. அதற்​கு சந்​தோஷ் பிர​தாப்​ சரி​யாகப்​ பொருந்தினார்​. பவ்​யா, பூஜி​தா​வும்​ அப்​படித்​தான். படப்​பிடிப்​பு முடிவடைந்​து விட்​டது. செப்​டம்​பரில்​ வெளி​யிட ​திட்டமிட்டுள்ளோம்​” என்​றார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version