தக்கலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சிறுவர்கள் 3 பேர் மது அருந்தும் வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. மது அருந்துவதை எச்சரித்த நபர்களை சிறுவர்கள் அவமானப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது. 21 வயது உட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என தடை உள்ளது.
எந்த அடிப்படையில் இந்த சிறுர்களுக்கு மது விற்பனை செய்தார்கள்? என்ன கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தக்கலை போலீசார் குறிப்பிட்ட அரசு மதுபான கடைக்கு சென்று விசாரித்தனர். சிறார்களுக்கு மது விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.