தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 134 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அறையை குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தக்கலை காவல் ஆய்வாளர் கிறிஸ்டி வரவேற்றார். தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் முன்னிலை வகித்தார். மேலும் தக்கலை காவல் நிலைய வளாகத்தினுள்ளே மேம்படுத்தப்பட்ட பணிகளையும் எஸ்பி தொடங்கி வைத்தார். இதில் பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் ஷோபன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.