Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை: இளம்பெண்ணை மிரட்டியவருக்கு  குண்டாஸ்

தக்கலை: இளம்பெண்ணை மிரட்டியவருக்கு  குண்டாஸ்

0

தக்கலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னுடன் நெருங்கி பழகிய நபர் தன்னுடைய ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவதாக கூறி மிரட்டி வருவதாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இளம்பெண்ணை மிரட்டிய தக்கலை, பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகன் ஜெயக்குமார் (எ) நாஞ்சில் ஜெயக்குமார் (50) என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா மேற்படி பாலியல் வழக்கு குற்றவாளியான நாஞ்சில் ஜெயக்குமார் என்பவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version