Home கன்னியாகுமரி செய்திகள் இரணியல்: நீதிமன்ற உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை

இரணியல்: நீதிமன்ற உதவியாளருக்கு 3 ஆண்டு சிறை

0

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் ஆசாரி மகன் லட்சுமணன். இவர் இரணியல் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி இரணியல் நீதிமன்றத்தில் நடந்த ஒரு செக்கு மோசடி வழக்கு சம்பந்தப்பட்ட வழக்கு கோப்புகளை அதே வழக்கின்  எதிரி நாகர்கோவில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கு விற்று உள்ளார்.

      இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ரேவதி ஆஜராகி வாதாடினார்.

     வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி அமர்தின் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் லஞ்சம் பெற்றுக் கொண்டு நீதிமன்ற விசாரணை கோப்புகளை விற்ற லட்சுமணனுக்கு 3 வருட சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், ஆவண கோப்புகளை லஞ்சம் கொடுத்து பெற்ற நாகராஜனுக்கு ஆறு வருட சிறைத் தண்டனை, ரூபாய் 20 ஆயிரம்  அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதை அடுத்து இருவரையும் இரணியல்  போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version