தக்கலையில் மறுசீரமைக்கப்பட்டு புதிதாக திறக்கப்பட்ட காமராஜர் பேருந்து நிலையத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருட்டு மற்றும் சட்டவிரோத சம்பவங்களைத் தடுக்கவும் பேருந்து நிலையத்தைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் தக்கலை ஆய்வாளர் பாரதிராஜா உடனிருந்தனர்.
