ஜூலை 14ஆம் தேதி உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் ராஜேஷ்குமார் இந்த முகாமை தொடங்கி வைத்தார். செல்லசாமி எம்.எல்.ஏ மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்ட இந்த முகாமில் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
