Home கன்னியாகுமரி செய்திகள் தக்கலை: பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு 2 பேர் கைது

தக்கலை: பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு 2 பேர் கைது

0

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான் (50) என்பவர் சாமியார்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். நேற்று பார் பகுதிக்குச் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த சாரோன் பிரபு, ஆல்பர்ட், ஆண்டோ பிரபு மற்றும் சுனில் ஆகிய 4 பேர் ஜாணைத் தடுத்து நிறுத்தி, அவரது சட்டைப் பையில் இருந்த ₹1000 பறித்து, மேலும் மாதம் ₹5000 மாமூல் தர வேண்டும் எனக் கூறிச் சென்றனர். இது குறித்து ஜான் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சாரோன் பிரபு மற்றும் ஆல்பர்ட் ஆகிய இருவரைக் கைது செய்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version