பெங்களூரு அணியுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றி நெருக்கடியில் சென்னையின் எஃப்சி

0
331

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று (25-ம் தேதி) இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீரா கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி – சென்னையின் எஃப்சி அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு எஃப்சி அணி 21 ஆட்டங்களில் விளையாடி, 10 வெற்றி, 4 டிரா, 7 தோல்விகளுடன் 34 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சென்னையின் எஃப்சி அணி 21 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 டிரா, 9 தோல்விகளுடன 24 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. 6-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எஃப்சிக்கும் (32 புள்ளிகள்), சென்னையின் எஃப்சி அணிக்கும் இடையே 8 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது.

இந்த ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும். மாறாக சென்னையின் எஃப்சி அணி வெற்றி பெற்றால் அந்த அணி மேற்கொண்டு எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் மற்ற அணிகளின் முடிவுகளும் சென்னையின் எஃப்சி அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும். இது நிகழ்ந்தால் சென்னையின எஃப்சி அடுத்த சுற்றில் கால்பதிக்க வாய்ப்பு உருவாகக்கூடும்.

ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் பெங்களூரு எஃப்சி 9 ஆட்டத்திலும், சென்னையின் எஃப்சி 4 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here