இந்தியாவுடன் டெஸ்ட் தொடர்: கேமரூன் கிரீன் விலகல்

0
240

மெல்பர்ன்: இந்தியாவுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நவம்பர் 22-ம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. ஜனவரி 7-ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. இந்நிலையில் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் நேற்று அறிவித்தார்.

முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் அடுத்த 6 மாத காலத்துக்கு கிரிக்கெட் விளையாட இயலாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. காயம் காரணமாக கேமரூன் கிரீன் விலகுவது ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. கிரீன், 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,377 ரன்கள் எடுத்துள்ளார். 35 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடர்ச்சியாக 2 டெஸ்ட் தொடரை வென்று இருந்தது. தற்போது ‘ஹாட்ரிக்’ தொடரை வெல்லும் ஆர்வத்தில் அந்நாட்டுக்குச் செல்லவுள்ளது.

இரு அணிகள் இடையே கடைசியாகநடைபெற்ற 4 டெஸ்ட் தொடரையும்இந்திய அணியே கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here