Home சினிமா செய்திகள் கடன் செயலி பின்னணியில் ‘பத்துநாள் ராஜா’

கடன் செயலி பின்னணியில் ‘பத்துநாள் ராஜா’

0

சதீஷ், ஆதி சாய்​குமார் முதன்மை பாத்​திரங்​களில் நடிக்​கும் படம், ‘பத்​துநாள் ராஜா’. தெலுங்​கில் நடித்து வரும் ஆதி சாய்குமார், இப்​படத்​தின் மூலம் தமி​ழில் அறி​முக​மாகிறார். ஆதியா பிரசாத், சரண்யா ராமச்​சந்​திரன், கருடா ராம், ஆடுகளம் நரேன், பருத்​திவீரன் சரவணன், ‘ஆதித்யா’ கதிர் உள்​பட பலர் நடிக்​கின்​றனர். குரு சரவணன் இயக்​கும் இப்​படத்தை எஸ்ஜிஎஸ் புரொடக் ஷன்ஸ் சார்​பில் ஜி.சுரேஷ் தயாரிக்​கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஜிப்​ரான் இசையமைத்​துள்​ளார்.

இப்​படம் பற்றி இயக்​குநர் குரு சரவணன் கூறும்​போது, “ஒவ்​வொரு மத்​தி​யதர குடும்​பங்​களும் இன்று சந்​திக்​கும் பிரச்​சினையை உண்​மைச் சம்​பவங்​களு​டன் இப்​படம் பேசுகிறது. கடன் செயலி​யில் பணம் வாங்​கிக்​கொண்டு மக்​கள் படும் கொடுமை​களைச் செய்​தித்​தாள்​களில் பார்க்​கிறோம். அதன் பின்​னணி​யில் இதன் திரைக்​கதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தக் கதைக்கு சில ஹீரோக்​களிடம் பேசினோம். கால்​ஷீட் பிரச்​சினை காரண​மாக இதில் நடிக்க இயல​வில்லை.

மத்​திய தர இளைஞர் கதாபாத்​திரத்​துக்கு சதீஷ் கச்​சித​மாகப் பொருந்தி இருக்​கிறார். இது​வரை காமெடி கதாபாத்​திரங்​களில் நடித்து வந்த சதீஷை இதில் சீரியஸாகப் பார்க்​கலாம். சாய்​குமாரின் மகன் ஆதிக்கு தமி​ழில் சிறந்த அறி​முக​மாக இப்​படம் இருக்​கும். இந்​தப் படத்தை தமிழ், தெலுங்​கில் உரு​வாக்​கி​யுள்​ளோம். தெலுங்​கில் ‘ஈகோ ராஜா’ என்று தலைப்பு வைத்​துள்​ளோம். படப்​பி​டிப்பு முடிவடைந்​து​விட்​டது. விரைவில் வெளியாக இருக்​கிறது” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version