மேல்மருவத்தூரில் விரைவு ரயில் தற்காலிக நிறுத்தம்: பிப்.2-ம் தேதி வரை நீட்டிப்பு

0
15

தைப்​பூச விழாவையொட்​டி, மேல்​மரு​வத்​தூரில் 28 விரைவு ரயில்​களுக்கு வழங்​கப்​பட்ட தற்​காலிக நிறுத்​தம், பிப்​.2-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது.

மேல்​மரு​வத்​தூரில் உள்ள ஆதிப​ராசக்தி சித்​தர் பீடத்​தில் தைப்​பூச விழா சிறப்​பாக நடத்​தப்​படு​கிறது. இதையொட்​டி, தமிழகம் மட்​டுமின்றி பல்​வேறு மாநிலங்​களில் இருந்தும் பக்​தர்​கள் மேல்​மரு​வத்​தூருக்கு வரு​வார்​கள்.

அவர்​களின் வசதிக்​காக, மேல்​மரு​வத்​தூர் வழி​யாக இயக்​கப்​படும் விரைவு ரயில்கள், தற்​காலிக​மாக அந்த நிலை​யத்​தில் நின்று செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, லோக்​மானிய திலக் – காரைக்​கால், எழும்​பூர் – மதுரை வைகை, எழும்​பூர் – மதுரை பாண்​டியன், கன்​னி​யாகுமரி – நிஜா​முதீன், மதுரை – நிஜா​முதீன், எழும்​பூர் – திருச்சி மலைக்​கோட்​டை, எழும்​பூர் – செங்​கோட்டை பொதி​கை, எழும்​பூர் – கொல்​லம், எழும்​பூர் – நாகர்​கோ​வில், எழும்​பூர் – மன்​னார்​குடி, தாம்​பரம் – ராமேசுவரம், எழும்​பூர் – உழவன், தாம்​பரம் – செங்​கோட்டை சிலம்​பு, எழும்​பூர் – சேலம் உட்பட 28 விரைவு ரயில்​கள் இரு​மார்க்​கத்​தி​லும் மேல்​மரு​வத்​தூரில் ஒரு நிமிடம் நின்று செல்​லும்.

இந்த 28 விரைவு ரயில்களுக்கும் பிப்​.2-ம் தேதி வரை மேல்​மரு​வத்​தூரில் தற்​காலிக நிறுத்​தம் நீட்​டித்து வழங்​கப்​பட்​டுள்​ளது என தெற்கு ரயில்வே தெரி​வித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here