கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு அறுகுவிளையை சேர்ந்த அருள் சிங் (32) வந்தார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருள் சிங், ராஜேஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் அருள் சிங்கை வடசேரி போலீசார் கைது செய்தனர்.














