கறிக்கோழி வளர்ப்புப் பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பக் குழு அமைப்பு

0
64

கால்​நடை பராமரிப்​புத் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​ குறிப்​பு: தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் சுமார் 50 முதல் 55 கோடி கறிக்கோழிகள் வளர்க்​கப்​பட்டு விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

இத்​தொழிலில் சுமார் 20 ஆயிரம் பண்​ணை​யாளர்​களும், அவர்​களுக்​குத் தீவனம் மற்​றும் குஞ்​சுகளை வழங்​கும் 66 ஒருங்​கிணைப்​பாளர் ​களும் ஈடு​பட்​டுள்​ளனர். சமீப​கால​மாக உற்​பத்​திச் செலவு அதி​கரிப்பு மற்​றும் இதர சிரமங்​கள் குறித்து பண்​ணை​யாளர்​கள் பல்​வேறு கோரிக்​கைகளை முன்​வைத்து வந்​தனர்.

இதனைத் தொடர்ந்​து, கடந்த டிச.29 மற்​றும் ஜன.21 ஆகிய தேதி​களில் கால்​நடை பராமரிப்பு இயக்​குநர் தலை​மை​யில் சங்க நிர்​வாகி​களு​டன் ஆலோ​சனைக் கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன.

பண்​ணை​யாளர்​களின் கோரிக்​கைகளைத் தீர ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்​டத்​தி​லும் தொழிநுட்ப குழு அமைக்​கப்பட்​டுள்​ளது.

இக்​குழு​வினர் பண்​ணை​யாளர்​கள் மற்​றும் ஒருங்​கிணைப்​பாளர்​களு​டன் ஆலோ​சித்​து, உள்​ளீடு​கள், தரம் மற்​றும் செல​வு, உற்​பத்​திப் பெருக்​கத்​துக்​கான வழி​வகைகள், வளர்ப்​புப் பணி​கள் மற்​றும் பண்​ணைச் செயல்​பாடு​களில் எதிர்​கொள்​ளும் பிரச்​சினை​கள், நோய்ப்​பர​வல் மற்​றும் மருத்​துவ சிகிச்​சையி​லிருக்​கும் இடைவெளி, உற்​பத்தி மற்​றும் கொள்​முதல் ஆகிய​வற்​றிற்​கிடையே​யான பிரச்​சினை தொடர்​பான விவரங்​களை ஆய்வு செய்து கறிக்கோழி வளர்ப்​புத் தொழில் நடை​பெறும் மாவட்​டங்​களில் அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யரிடம் கலந்​தாலோ​சித்து உரிய தீர்வு காண அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here