Home விளையாட்டு செய்திகள் வைபவ் சூர்யவன்ஷி விளாசலில் ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ராக இந்திய அணி வெற்றி

வைபவ் சூர்யவன்ஷி விளாசலில் ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ராக இந்திய அணி வெற்றி

0

ஜிம்​பாப்​வேவுக்கு எதி​ரான 3-வது மற்​றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி​​யில் இந்திய அணி 35 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி​யாக விளை​யாடி 81 ரன்​கள் குவித்​தார். இதையடுத்து ஜிம்​பாப்​வேவுக்கு எதிரான இந்​தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்​பற்​றியது.

இந்​திய அணி, ஜிம்​பாப்​வே​யில் சுற்​றுப்​பயணம் செய்து 3 போட்​டிகள் கொண்ட டி20 தொடரில் விளை​யாடியது. 2 போட்​டிகள் முடிந்த நிலை​யில் தொடரை இந்​திய அணி ஏற்​கெனவே கைப்​பற்றி விட்​டது. இந்​நிலை​யில் 3-வது போட்டி ஹராரே​வில் நேற்று மாலை 4.30 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய இந்​திய அணி 5 விக்​கெட் இழப்​புக்கு 192 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீரர்​களாக வைபவ் சூர்​ய​வன்​ஷி​யும், அபிஷேக் சர்மாவும் களமிறங்​கினர். அதிரடி​யாக விளை​யாட முற்​பட்ட அபிஷேக் 4 பந்​துகளில் 2 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார். 26 பந்​துகளில் 29 ரன்​கள் எடுத்த நிலை​யில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். ஆனால் மறு​முனை​யில் வைபவ் சூர்​ய​வன்ஷி அதிரடி​யாக விளை​யாடி​னார். அவர் 49 பந்​துகளில் 81 ரன்​கள் குவித்து அவுட்​டா​னார்.

இதில் 8 பவுண்​டரி​கள், 4 சிக்​ஸர்​கள் அடங்​கும். சர்​வ​தேச டி20 போட்​டிகளில் அவர் எடுத்த 2-வது அரை சதமாகும் இது. ஸ்ரேயஸ் ஐயர் 27 ரன்​கள் எடுத்து வீழ்ந்​தார். திலக் வர்மா 11 ரன்​களும், ரிங்கு சிங் 25 ரன்​களும் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

பின்​னர் 193 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் ஜிம்​பாப்வே அணி விளை​யாடத் தொடங்​கியது. ரியான் பர்ல் 54, பிரையன் பென்​னெட் 0, பென் கரண் 20, டியான் மையர்ஸ் 19, சிகந்​தர் ராஸா 0, வெஸ்லி மாதேவரே 28, மறுமணி 1, பிராட் இவான்ஸ் 14 ரன்​கள் எடுத்து வீழ்ந்​தனர்.

முடி​வில் 20 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 157 ரன்​களை மட்டுமே ஜிம்​பாப்வே அணி எடுத்​தது. இதையடுத்து 35 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இந்​திய அணி வெற்றி பெற்​றது. மேலும் டி20 தொடரை 3-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்​பற்​றி​யுள்​ளது. தொடர்​ நாயகன்

இந்த ஆட்​டத்​தின் ஆட்​ட​நாயகன் விருதை​யும், தொடர் நாயகன் விருதை​யும் வைபவ் சூர்​ய​வன்ஷி கைப்பற்றினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version