சீனாவின் சான்யா கடற்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 6-வது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடி அணி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தது.
இந்த அணியில் இடம் பெற்றிருந்த பிரிஜேந்திர சிங் சவுத்ரி போட்டிக்கு இடையே நடத்தப்பட்ட சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பரிசோதனை முகமை வெளியிட்டுள்ள தகவலின்படி, சவுத்ரி கடந்த ஏப்ரல் 27 அன்று தடைசெய்யப்பட்ட பிரிஞ்சோலாமைடு என்ற ஊக்கமருந்தை உட்கொண்டது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
