தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

0
19

அகவை முதிர்ந்த தமிழறிஞர்​கள் அரசின் சார்​பில் மாதம்​தோறும் ரூ.8,000 உதவித்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என்று தமிழ் வளர்ச்​சித் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்​சித் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அகவை முதிர்ந்த தமிழறிஞர்​களுக்கான உதவித்​தொகை பெறுவதற்கான விண்​ணப்​பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலை​தளத்​தில் பதி​விறக்​கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் இயங்​கி வரும் மண்​டல, மாவட்ட தமிழ் வளர்ச்​சித் துறை இயக்​குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்​குநர் அலு​வல​கங்​கள் வாயி​லாக மட்​டுமே அனுப்ப வேண்​டும். விண்​ணப்​பங்​கள் சமர்ப்​பிக்க நவ. 17-ம் தேதி கடைசி நாளாகும். கூடு​தல் விவரங்​களை மேற்​கண்ட இணை​யதளத்​தில் அறிய​லாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here