Home மாநில செய்திகள் திருமண மோசடிகளை தடுக்கும் வகையில் மேட்ரிமோனி தளத்தில் ஆதார் மூலம் பயனர் சரிபார்ப்பு: தமிழக அரசு...

திருமண மோசடிகளை தடுக்கும் வகையில் மேட்ரிமோனி தளத்தில் ஆதார் மூலம் பயனர் சரிபார்ப்பு: தமிழக அரசு அனுமதி

0

திரு​மணம் தொடர்​பான மோசடிகளைத் தடுக்​கும் வகை​யில், வாடிக்​கை​யாளர்​களின் அடை​யாளத்தை ஆதார் அடிப்​படை​யில் சரி​பார்க்க ‘மேட்ரிமோனி’ நிறு​வனத்​துக்கு தமிழக அரசு அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதுகுறித்து சமூகநலத் துறைச் செயலர் எம். பல்​லவி பல்​தேவ் வெளி​யிட்டுள்ள அரசிதழ் அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: மேட்​ரிமோனி நிறு​வனத்​தின் இணை​யதளத்​தைப் பயன்​படுத்​தும் பயனர்​களின் அடை​யாளத்தை உறுதி செய்து நம்​பகத்​தன்​மையை அதி​கரிக்​க​வும், ஆள்​மாறாட்​டத்​தைத் தடுக்​க​வும், திரு​மணம் தொடர்​பான மோசடிகளைக் கட்​டுப்​படுத்​த​வும் ஆதார் அங்​கீ​காரத்​தைப் பயன்​படுத்த அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

பயனர்​களின் சுய​விவரங்​களில் ‘சரி​பார்க்​கப்​பட்ட பயனர்’ என்​ப​தைக் குறிக்​கும் வகை​யில் ஆம்​/இல்லை வசதியை அந்த நிறு​வனம் பயன்​படுத்​திக் கொள்​ளலாம்.

கட்​டாயமில்லை

இந்த ஆதார் சரி​பார்ப்பு முறை முழு​வதும் தன்​னார்வ அடிப்​படை​யிலேயே மேற்​கொள்​ளப்பட வேண்​டும். ஆதார் எண்​ணைப் பயன்​படுத்​திச் சரி​பார்ப்பை மேற்​கொள்​ளும் முன்​பு, சம்​பந்​தப்​பட்ட ஆதார் எண் வைத்​திருப்​பவரின் ஒப்​புதலை மேட்​ரிமோனி நிறு​வனம் கட்​டா​யம் பெறவேண்​டும்.

மேலும், ஆதார் சரி​பார்ப்பை மறுக்​கும் அல்​லது செய்ய முடி​யாத பயனர்​களுக்​கு, மாற்று அடை​யாள ஆவணங்​களை சமர்ப்​பிக்​கும் நடை​முறையை நிறு​வனம் தெரிவிக்க வேண்​டும். ஆதார் சரி​பார்ப்பு செய்ய மறுப்​ப​தால் எந்​தவொரு பயனருக்​கும் சேவையை நிறு​வனம் மறுக்​கக்​கூ​டாது.

அதன்​படி ஆதார் அட்​டைக்கு மாற்​றாக ஓட்​டுநர் உரிமம், பாஸ்​போர்ட், பான் அட்டை ஆகிய ஆவணங்​களை வாடிக்​கை​யாளர்​கள் பயன்​படுத்​திக் கொள்​ளலாம்.

இதற்​காக மத்​திய மின்​னணு மற்​றும் தகவல் தொழில்​நுட்ப அமைச்​சகம் இந்​தி​யத் தனித்​துவ அடை​யாள ஆணை​யத்​துடன் கலந்​தாலோ​சித்​து, மேட்​ரிமோனி நிறு​வனத்​தில் ஆதார் சரி​பார்ப்பை மேற்​கொள்ள அனு​ம​திப்​பது தொடர்​பாக தமிழக சமூக நலத்​துறைக்​குக் கடிதம் அனுப்​பி​யிருந்​தது.

அதன் அடிப்​படை​யில் இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. தமிழக அரசின் அரசிதழில் வெளி​யிடப்​பட்ட நாளில் இருந்து இந்த அறி​விப்பு நடை​முறைக்கு வரு​கிறது. இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version