தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பு சார்பில் டேப்லெட்ஸ் இந்தியா- தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 25-ம் தேதி முதல் மார்ச் 25-ம் தேதி சென்னை நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் கோல்ப் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி கிளப் உறுப்பினர்களுக்காக நடத்தப்படுகிறது.
அம்ருத் வாரியர்ஸ் கோல்ப், ஓபி எக்ஸ்பிரஸ், மெட்ராஸ் ஈகிள்ஸ், பென்டகன் கோல்ப் அடிக்ட்ஸ், சென்னை ஹஸ்ட்லெர்ஸ், பேர்வே அசாசின்ஸ், மெட்ராஸ் மாஸ்டர்ஸ், டீம் ஆல்செக், 19 ஹோல் ஸ்மாஷர்ஸ், ஆர்.எஸ்.எல், கிண்டி குண்டாஸ், எக்சிகியூட்டிவ் ஈகிள்ஸ் ஆகிய 12 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இடம் பெறுவார்கள். 2 பேர் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். 14 வீரர்கள் ஏலம் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனைத்து வீரர்களும் போட்டியின் போது குறைந்தது ஒரு தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டும்.
4 ரவுண்டுகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடர்பான அறிமுக நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் கோல்ப் கிளப்பில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு கோல்ப் சங்க தலைவர் கே.சி. ரகுநாதன், போட்டி இயக்குநர்கள் ராமசுப்பிரமணியன், ஏ. சந்திரசேகரன் கே. சுந்தர், பாபு தண்டபாணி மற்றும் அணி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அறிமுக நிகழ்ச்சியில் தமிழ்நாடு கோல்ப் சங்க தலைவர் ரகுநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














