ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி

0
166

ஹாக்கி இந்தியா லீக்கில் நேற்று ஆடவர் பிரிவில் ரூர்கேலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் – ஹைதராபாத் டூஃபேன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது. தமிழக அணி தரப்பில் 4-வது நிமிடத்தில் பிளேக் கோவர்ஸும், 37-வது நிமிடத்தில் ஜிப் ஜான்சனும் கோல் அடித்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் 3-வது நிமிடத்தில் டிம் பிராண்டும், 59-வது நிமிடத்தில் மைகோ காசெல்லாவும் கோல் அடித்தனர்.

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க ஷூட்வுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு டிராகன்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழக அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here