ஆமிர் கான் மகனுடன் த்ரில்​லர் படத்​தில் நடிக்கிறார் தமன்னா!

0
19

இந்​தி​யில் உரு​வான ஹாரர் த்ரில்​லர் படம், ‘ராகினி எம்எம்எஸ்’. காமெடி​யுடன் கூடிய இந்​தப் படத்​தின் முதல் இரண்டு பாகங்​கள் வெற்றி பெற்​றதை அடுத்​து, இதன் மூன்​றாம் பாகம் தற்போது உரு​வாகிறது. இதற்கு ‘ராகினி 3′ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

இதில் தமன்னா நாயகி​யாக நடிக்​கிறார். இப்​படத்​தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நாயக​னாக நடிக்கிறார். இப்​படத்தை சாஹிர் ராசா இயக்​கு​வார் என்று முதலில் கூறப்​பட்​டது.

இப்​போது ஷஷாங்கா கோஷ் இயக்​கு​வார் என்​றும் சாஹிர் ராசா மேற்​பார்வை செய்​வார் என்​றும் கூறப்​பட்​டுள்​ளது. பாலாஜி மோஷன் பிக்​சர்ஸ் சார்​பில் ஏக்தா கபூர் தயாரிக்கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு விரை​வில் தொடங்க இருக்​கிறது. நடிகை தமன்​னா, இந்​தி​யில் உருவாகும் வி.​சாந்​தா​ராமின் பயோபிக் படத்​தில் அவர் மனைவியாக நடித்து வருகிறார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here