தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அசாருதீன் (26). இறைச்சிக் கடையில் தொழில் செய்யும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனது தாயாருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தவர் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் அவரது அறைக் கதவு திறக்கவில்லை.
இதைத் தொடர்ந்து தாயார் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து கதவை உடைத்துப் பார்த்தார். அப்போது அசாருதீன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தக்கலை போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
            

