தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜோபு கல்சன் மனைவி தனிஷா (29). நாகர்கோவில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு தனிஷா குளச்சல் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
பள்ளியாடி பகுதியில் வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிள் வந்த ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் திடீரென தனிஷாவின் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தங்க சங்கிலி பறிக்க முயன்றார். தனிஷா கையால் தங்கச் சங்கிலியை பிடித்துக் கொண்டு சத்தம் போட்டதால் மர்ம நபர் வேகமாக தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து தனிஷா தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றிய ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.