குமரி மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு நாகர்கோவிலில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் ஜோசப் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரவீந்திரதாஸ் கொடியேற்றி வைத்தார். துணைச் செயலாளர் சோபா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு பொருளாளர் இந்திரா வரவேற்றார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் பேசினார். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் மேரி ஜாண்சிபாய் நன்றி கூறினார்.
            













