டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’ அணி

0
33

ஐசிசி டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்​கான பயிற்சி ஆட்​டங்​கள் நேற்று தொடங்​கின. இதில் நவி மும்​பை​யில் உள்ள டி.ஓய்​.​பாட்​டீல் மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் அமெரிக்கா – இந்தியா ‘ஏ’ அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த இந்தியா ‘ஏ’ அணி 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 238 ரன்​கள் குவித்​தது.

தொடக்க வீர​ரான நாராயணன் ஜெகதீசன் 55 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 104 ரன்​கள் விளாசி​னார். கேப்​டன் ஆயுஷ் பதோனி 26 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 60 ரன்​களும், திலக் வர்மா 24 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 38 ரன்​களும், பிரியன்ஷ் ஆர்யா 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களுடன் 28 ரன்​களும் சேர்த்​தனர்.

239 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த அமெரிக்க அணி 19.4 ஓவர்​களில் 200 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அமெரிக்க அணியின் பேட்டிங்கில் ஆண்ட்​ரீஸ் கோஸ் 44, சஞ்​ஜய் கிருஷ்ண​மூர்த்தி 41, ஷுபம் ரஞ்​சனே 28, ஹர்​மீத் சிங் 25 ரன்​கள் சேர்த்​தனர். இந்​தியா ‘ஏ’ அணி சார்பில் ரவி பிஷ்னோய் 3, கலீல் அகமது 2, நமன் திர் 2 விக்கெட்​களை வீழ்த்​தினர். மயங்க் யாதவ் 3 ஓவர்​களை வீசி 37 ரன்களை வழங்​கிய நிலை​யில் விக்​கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here