டி20 உலகக் கோப்பை: மில்னேவுக்கு பதில் கைல் ஜேமிசன்

0
91

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் வரும் பிப்​ர​வரி 7-ம் தேதி இந்​தியா மற்​றும் இலங்கை​யில் தொடங்கு​கிறது. 20 அணி​கள் கலந்து கொள்ளும் இந்​தத் தொடரில் நியூஸிலாந்து அணி ‘டி’ பிரிவில் இடம் பெற்​றுள்​ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்​கான நியூஸிலாந்து அணி ஏற்​கெனவே அறிவிக்கப்​பட்​டிருந்​தது. இதில் இடம் பெற்​றிருந்த வேகப்​பந்து வீச்சாள​ரான ஆடம் மில்னே காயம் காரண​மாக விலகி உள்​ளார்.

ஆடம் மில்னே கடந்த ஞாயிற்​றுக்​கிழமை தென் ஆப்பிரிக்கா​வில் நடை​பெற்ற எஸ்​ஏ20 தொடரில் விளையாடிய போது இடது தொடை பகு​தி​யில் காயம் அடைந்​தார். காயத்​தில் குணமடைய நீண்ட காலம் ஆகும் என்​ப​தால் ஆடம் மில்​னே, டி 20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்​ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் பட்​டியலில் இடம் பெற்​றிருந்த கைல் ஜேமிசன் பிர​தான அணி​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here