T20 WC 2026 | “எதிரணி பவுலர்களின் ஒவ்வொரு பந்தையும் விளாச தயார்” – திலக் வர்மா

0
18

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 குரூப்-1 ஆட்டத்தில் 72 ரன்களில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் அரையிறுதி ஆட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு இந்தியா உயிர்ப்போடு வைத்துள்ளது.

சென்னை – சேப்பாக்கத்தில் உலா எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் திலக் வர்மா, 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 275. இந்த தொடரில் இதற்கு முன்பு நடைபெற்ற ஆட்டங்களில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக பேட் செய்த அவர், இந்த ஆட்டத்தில் ஆறாவது வீரராக விளையாடி இருந்தார்.

“நாங்கள் இது மாதிரியான தொடக்கத்தைதான் எதிர்பார்த்தோம். தொடக்க ஆட்டக்காரர்கள் சிறந்த தொடக்கத்தை கொடுத்தால் அதே நம்பிக்கையை தங்கள் ஆட்டத்தின் மூலம் அடுத்தடுத்து வரும் வீரர்களும் வெளிப்படுத்துவார்கள். சஞ்சு சாம்சான் சிறப்பான ஆட்டத்தை தொடக்கி வைத்தார். அதை அப்படியே எல்லோரும் பின்பற்றினோம்.

பவர்பிளே ஓவர்களில் மூன்று அல்லது நான்கு விக்கெட்டுகளை இழந்தாலும் நாங்கள் அடித்து ஆட விரும்புகிறோம். எதிரணி பந்து வீச்சாளர்களிடத்தில் ‘ஒவ்வொரு பந்தையும் அடித்து துவம்சம் செய்ய தயாராக இருக்கிறார்கள்’ என்ற பயத்தை ஏற்படுத்த விரும்பினோம்.

அணிக்கு என்ன தேவையோ அதை செய்ய நான் தயார் என எப்போதும் சொல்வேன். அதுதான் என் பணி. இதே ரோலை ஐபிஎல் கிரிக்கெட் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பலமுறை செய்துள்ளேன். இந்திய அணிக்காகவும் சில ஆட்டங்களில் நான் பேட்டிங் ஆர்டரில் பின்வரிசையில் விளையாடியது உண்டு” என திலக் வர்மா தெரிவித்தார்.

வரம் மார்ச் 1-ம் தேதி அன்று கொல்கத்தா – ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுடன் இந்திய அணி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் விளையாட உள்ளது. இதில் வெற்றி பெறுகின்ற அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here