T20 WC 2026: பாகிஸ்தானை வீழ்த்தி சூப்பர் 8-ல் கால்பதித்த இந்திய அணி!

0
25

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. மிகுந்த எதிர்​பார்ப்பை ஏற்​படுத்​தி​யிருந்த இந்த ஆட்​டத்​தில் டாஸ் வென்ற பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா பீல்​டிங்கை தேர்வு செய்​தார்.

பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு தொடக்​கமே அதிர்ச்​சி​யாக இருந்​தது. சல்​மான் அலி ஆகா வீசிய முதல் ஓவரில் 4 பந்​துகளை சந்​தித்த அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் மிட் ஆன் திசை​யில் ஷாகின் ஷா அப்​ரிடி​யிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதையடுத்து களமிறங்​கிய திலக் வர்மா நிதான​மாக விளை​யாடி​னார். ஷாகின் ஷா அப்​ரிடி வீசிய 2-வது ஓவரில் ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களை விரட்​டி​னார். இந்த ஓவரில் 15 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. சல்​மான் அலி ஆகா வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் ஒரு பவுண்​டரி விரட்ட இந்த ஓவரில் 9 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. சைம் அயூப் வீசிய 4-வது ஓவரில் 5 ரன்​களை மட்டும் விட்​டுக்​கொடுத்​தார்.

அப்​ரார் அகமது வீசிய 5-வது ஓவரில் இஷான் கிஷன் ஒரு பவுண்​டரி விரட்ட இந்த ஓவரில் 11 ரன்​கள் எடுக்​கப்​பட்​டன. அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்​டரி​கள் அடிக்க பவர்​பிளே முடி​வில் இந்​திய அணி 52 ரன்​கள் சேர்த்​தது. அப்​ரார் அகமது வீசிய 7-வது ஓவரில் இஷான் கிஷன் 3 பவுண்​டரி​களை விரட்​டி​னார். மட்​டையை சுழற்​றிய இஷான் கிஷன் 27 பந்​துகளில் அரை சதம் விளாசி​னார்.

ஷதப் கான் வீசிய 8-வது ஓவரில் தலா ஒரு சிக்​ஸர், பவுண்​டரியை விளாசி அசத்​தி​னார் இஷான் கிஷன். இந்த ஓவரில் 17 ரன்​கள் குவிக்​கப்​பட்​டன. அதிரடி​யாக விளை​யாடிய இஷான் கிஷன் 40 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 10 பவுண்​டரி​களு​டன் 77 ரன்​கள் எடுத்த நிலை​யில் சைம்அயூப் பந்​தில் போல்​டா​னார்.

2-வது விக்​கெட்​டுக்கு இஷான் கிஷன், திலக் வர்மா ஜோடி 7.4 ஓவர்​களில் 87 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் வழக்​கத்​துக்கு மாறாக மிக​வும் நிதான​மாக பேட் செய்​தார். இந்​திய அணி 11.1 ஓவர்​களில் 100 ரன்​களை எட்​டியது. மறு​முனை​யில் பொறுமை​யாக விளை​யாடி வந்த திலக் வர்மா 24 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 25 ரன்​கள் எடுத்த நிலை​யில் சைம் அயூப் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார்.

3-வது விக்​கெட்​டுக்கு சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்மா ஜோடி 38 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஹர்​திக் பாண்​டியா (0) தான் சந்​தித்த முதல் பந்தை சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது லாங் ஆஃப் திசை​யில் பாபர் அஸமிடம் கேட்ச் ஆனது. சைம் அயூப் அடுத்​தடுத்து கைப்​பற்​றிய இந்த 2 விக்​கெட்​களால் இந்​திய அணிக்கு அழுத்​தம் உரு​வானது.

அப்​போது இந்​திய அணி 15 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 127 ரன்​கள் எடுத்​திருந்​தது. இதைத் தொடர்ந்து களமிறங்​கிய ஷிவம் துபே அதிரடி​யாக விளை​யாட முயன்​றார். நவாஷ் அகமது வீசிய 16-வது ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்​டரி அடிக்க இந்த ஓவரில் 9 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டது. உஸ்​மான் தாரிக் வீசிய அடுத்த ஓவரில் 4 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​தார்.

அப்​ரார் அகமது வீசிய 18-வது ஓவரில் சூர்​யகு​மார் யாதவ் பவுண்​டரி அடிக்க, ஷிவம் துபே சிக்​ஸர் விளாசி அசத்​தி​னார். இந்த ஓவரில் 14 ரன்​கள் சேர்க்​கப்​பட்​டன. நிதான​மாக விளை​யாடி வந்த சூர்​யகு​மார் யாதவ் உஸ்​மான் தாரிக் பந்தை டீப் மிட்விக்​கெட் திசை​யில் சிக்​ஸருக்கு விளாச முயன்ற போது எல்​லைக்​கோட்​டுக்கு அருகே சைம் அயூப்​பிடம் கேட்ச் ஆனது. 29 பந்​துகளை சந்​தித்த சூர்​யகு​மார் யாதவ் 3 பவுண்​டரி​களு​டன் 32 ரன்​கள் சேர்த்​தார்.

அப்​போது ஸ்கோர் 18.5 ஓவர்​ளில் 159 ஆக இருந்​தது. ஷாகின் ஷா அப்​ரிடி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை ஷிவம் துபே பவுண்​டரிக்கு விரட்​டி​னார். இதே ஓவரின் 3-வது பந்​தில் பவுண்​டரி அடித்த ரிங்கு சிங், அடுத்த பந்தை டீப் மிட்விக்​கெட் திசை​யில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார். அடுத்த பந்​தில் 2 ரன்​கள் சேர்க்க முயன்ற போது ஷிவம் துபே ரன் அவுட் ஆனார்.

ஷிவம் துபே 17 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 3 பவுண்​டரி​களு​டன் 27 ரன்​கள் சேர்த்​தார். ஆட்​டத்​தின் கடைசி பந்​தில் அக்​சர் படேல் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ஆட்​ட​மிழந்​தார். 20 ஓவர்​களின் முடி​வில் இந்​திய அணி 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 175 ரன்​கள் எடுத்​தது. ரிங்கு சிங் 4 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 11 ரன்​கள் சேர்த்​தார். பாகிஸ்​தான் அணி தரப்​பில் சைம் அயூப் 3 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். சல்​மான் அலி ஆகா, ஷாகின் ஷா அப்​ரிடி, உஸ்​மான் தாரிக் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

176 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணி இந்​திய அணி​யின் பந்​து​வீச்​சில் தொடக்​கத்​திலேயே ஆட்​டம் கண்​டது. சாகிப்​சாதா 0 ரன்​னில் ஹர்​திக் பாண்​டியா பந்​தில் நடையை கட்​டி​னார். ஜஸ்​பிரீத் பும்ரா வீசிய அடுத்த ஓவரில் சைம் அயூப் 6, சல்​மான் அலி ஆகா 4 ரன்​களில் வெளி​யேறினர். 13 ரன்​களுக்கு 3 விக்​கெட்​களை பறி​கொடுத்த பாகிஸ்​தான் அணி​யால் அதன் பின்​னர் மீள முடிய​வில்​லை.

பாபர் அஸம் 5 ரன்​களில் அக்​சர் படேல் பந்​தில் போல்​டா​னார். சற்று தாக்​குப்​பிடித்து அதிரடி​யாக விளை​யாட முயன்ற உஸ்​மான் கான் 34 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 6 பவுண்​டரி​களு​டன் 44 ரன்​கள் எடுத்த நிலை​யில் அக்​சர் படேல் பந்​தில் ஸ்டெம்​பிங்க் ஆனார்.

இதைத் தொடர்ந்து முகமது நவாஷ் 4 ரன்​களில் குல்​தீப் யாதவ் பந்​தில் வெளி​யேறி​னார். இதன் பின்​னர் ஷதப் கான் 14 ரன்​களில் திலக் வர்மா பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். வருண் சக்​ர​வர்த்தி வீசிய 16-வது ஓவரில் ஃபஹீம் அஷ்ஃரப் (10), அப்​ரார் அகமது (0) ஆகியோர் அடுத்​தடுத்த பந்​தில் ஆட்​ட​மிழந்​தனர். கடைசி வீர​ராக உஸ்​மான் தாரிக் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ஹர்​திக் பாண்​டியா பந்​தில் போல்​டா​னார். முடி​வில் பாகிஸ்​தான் அணி 18 ஓவர்​களில் 114 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஷாகின் ஷா அப்​ரிடி 19 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 23 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.

இந்​திய அணி தரப்​பில் ஜஸ்​பிரீத் பும்​ரா, ஹர்​திக் பாண்​டி​யா, அக்​சர் படேல், வருண் சக்​ர​வர்த்தி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். குல்​தீப் யாதவ், திலக் வர்மா ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 61 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய அணிக்கு இது ஹாட்​ரிக் வெற்​றி​யாக அமைந்​தது. இந்த வெற்​றி​யின் மூலம் இந்​திய அணி தனது பிரி​வில் 6 புள்​ளி​களு​டன் முதலிடம் பிடித்து சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறியது.

அதேவேளை​யில் பாகிஸ்​தான் அணிக்கு இது நடப்பு தொடரில் முதல் தோல்​வி​யாக அமைந்​ததது. 3 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 2 வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 4 புள்​ளி​கள் பெற்று -0.403 நிகர ரன் விகிதத்​துடன் புள்​ளி​கள் பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேற வேண்​டு​மா​னால் தனது கடைசி ஆட்​டத்​தில்​ நமீபி​யா​வை வீழ்த்​த வேண்​டும்​. இந்​த ஆட்​டம்​ வரும்​ 18-ம்​ தேதி கொழும்​பு நகரில் நடைபெறுகிறது.

இதுவே அதிகபட்சம்: ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் நேற்று கொழும்பு நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 175 ரன்கள் குவித்தது. டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் அதிகபட்ச ரன்குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 160 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here