T20 WC 2026: அமெரிக்காவுக்கு முதல் வெற்றி

0
25

ஐசிசி டி20 உலகக்​கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ஏ பிரி​வில் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ. சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெற்ற லீக்​ஆட்​டத்​தில் அமெரிக்கா – நெதர்​லாந்து அணி​கள்​மோ​தின. முதலில் பேட் செய்​த அமெரிக்க அணி 20 ஓவர்​களில் 6 விக்​கெட்​கள்​இழப்​புக்கு 196 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக சாய் தேஜா முக்​கமல்லா 51 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 79 ரன்​கள் விளாசி​னார். முன்​ன​தாகதொடக்க வீரர்​களான கேப்​டன் மோனங்க் படேல் 22 பந்​துகளில், 36 ரன்​களும் சஹாயன்​ஜ​காங்​கிர் 14 பந்​துகளில் 20 ரன்​களும் சேர்த்​துஆட்​ட​மிழந்​தனர்.

சஞ்​சய் கிருஷ்ண​மூர்த்தி 1 ரன்​னில் வெளி​யேறி​னார். இறுதிக்​கட்ட ஓவர்​களில் சுபம் ரஞ்​சனே 24 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 48 ரன்​கள் விளாசி​னார். நெதர்​லாந்து அணி சார்​பில் பாஸ் டி லீடு 3 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். இதையடுத்து 197 ரன்​கள்​இலக்​குடன் பேட் செய்த நெதர்​லாந்து 15.5 ஓவர்​களில்​103 ரன்​களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதி​கபட்​ச​மாக பாஸ் டி லீடு 23, ஸ்காட் எட்​வர்ட்ஸ் 20 ரன்கள் சேர்த்​தனர். அமெரிக்க அணி​யின் பந்​து​வீச்​சில் ஹர்​மீத் சிங் 4 விக்​கெட்​களை சாய்த்​தார். சால்விக் 3, முகமது மோசின் 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 93 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி நடப்பு தொடரில் முதல் வெற்​றியை பதிவு செய்​தது. அந்த அணி தனது முதல் ஆட்​டத்​தில் இந்​தி​யா​விட​மும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்​தானிட​மும் தோல்வி அடைந்​திருந்​தது. நெதர்லாந்து அணிக்கு இது 2-வது தோல்​வி​யாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here