Home விளையாட்டு செய்திகள் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: சாப்மேன், ஜாக் ஃபோல்க்ஸ் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: சாப்மேன், ஜாக் ஃபோல்க்ஸ் விலகல்

0

இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாத இறு​தி​யில் நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து 5 டி20, 5 ஒரு​நாள் போட்​டி, 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாட உள்​ளது. இதில் டி20 தொடர் வரும் 22-ம் தேதி கிறைஸ்ட்​சர்ச் நகரில் தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் டி20 தொடருக்​கான நியூஸிலாந்து அணி​யில் இடம் பெற்​றிருந்த சுழற்​பந்து வீச்சு ஆல்​ர​வுண்​ட​ரான மார்க் சாப்​மேன், மிதவேகப்​பந்து வீச்​சாள​ரான ஜாக் ஃபோல்க்ஸ் ஆகியோர் காயம் காரண​மாக விலகி உள்​ளனர்.

கடந்த மாதம் ஐரோப்​பிய டி20 லீக் தொடரில் விளை​யாடிய போது இடது தொடை​யில் மார்க் சாப்​மேன் காயம் அடைந்​திருந்​தார். வேகப்​பந்து வீச்​சாளர் ஜாக் ஃபோல்க்​ஸ், கேன்​டர்​பரி அணிக்​காக பயிற்​சி​யில் ஈடு​பட்ட போது வலது இடுப்​புப் பகு​தி​யில் காயம் அடைந்​தார்.

காயத்​தில் இருந்து குணமடைந்து வரும் 32 வயதான இடது கை பேட்​ட​ரான சாப்​மேன், இது​வரை 113 டி20 சர்​வ​தேசப் போட்டிகளில் விளை​யாடி​யுள்​ளார். அவர், இந்​தி​யா​வுக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டியில் மீண்​டும் களமிறங்​கு​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ஆனால், ஃபோல்க்ஸ் எப்​போது மீண்​டும் அணிக்கு திரும்​பு​வார் என்​பது உறு​தி​யாக​வில்​லை. இந்​தி​யா​வுக்கு எதி​ரான டி20 தொடரில் இருந்து விலகி உள்ள இவர்​கள் இருவருக்கும் பதிலாக ஆல்​ர​வுண்​டர் ஜோஷ் கிளார்க்​சன், வேகப்​பந்து வீச்சாளர் பிளேர் டிக்​னர் ஆகியோர் அணி​யில்​ சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version