நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டி: தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

0
15

நியூஸிலாந்து அணிக்​கெ​தி​ரான முதலா​வது சர்​வ​தேச டி20 போட்​டி​யில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. தென் ஆப்​பிரிக்க அணி, நியூஸிலாந்​தில் சுற்​றுப்​பயணம் செய்து டி20 கிரிக்​கெட் தொடரில் விளை​யாடி வரு​கிறது. மவுண்ட் மவுங்​க​னு​வில் நேற்று முதலா​வது டி20 போட்டி நடை​பெற்​றது.

முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 14.3 ஓவர்​களில் 91 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. நியூஸிலாந்து அணி​யின் கேப்​டன் மிட்​செல் சான்ட்​னர் 15, ஜேம்ஸ் நீஷம் 26, கோல் மெக்​கோன்சி 15, பெவன் ஜேக்​கப்ஸ் 10 ரன்​கள் எடுத்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி​யின் நக்​கோபனி மோகோய்னா 3, ஜெரால்டு கோட்​ஸி, ஓட்​நீல் பார்ட்​மேன், கேசவ் மகா​ராஜ் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் சாய்த்​தனர்.

பின்​னர் விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 16.4 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 93 ரன்​கள் எடுத்து வெற்றி கண்​டது. டோனி டி ஜோர்ஸி 2, ரூபின் ஹெர்​மான் 7, ஜேசன் ஸ்மித் 10 ரன்​கள் எடுத்​தனர். கானர் எஸ்​டர்​ஹுய்​சான் 45, டியான் பாரஸ்​டர் 16 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

இதையடுத்து 7 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி வெற்றி பெற்று 5 போட்​டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை​யில் உள்​ளது. இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான 2-வது டி20 போட்டி நாளை (மார்ச் 17) ஹாமில்​டனில் நடை​பெறவுள்​ளது. ஆட்​ட​நாயக​னாக நக்​கோபனி மோகோய்​னா தேர்​வா​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here