தமிழகத்தை சேர்ந்த மாணிக்கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

0
16

தமிழக எம்​பிக்​கள் மாணிக்​கம் தாகூர், வெங்கடேசன் உட்பட 8 எம்​பிக்​களின் சஸ்​பெண்ட் ரத்து செய்யப்பட்டு உள்​ளது.

பட்​ஜெட் கூட்​டத் தொடரின் முதல் அமர்​வின்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி, இந்​தி​யா, சீனா எல்​லைப் பிரச்​சினை குறித்து பேச முயன்​றார். அப்​போது அவருக்கு அனுமதி மறுக்​கப்​பட்​டது. இந்த விவ​காரம் தொடர்​பாக கடந்த பிப்ர​வரி 3ம் தேதி, மக்​கள​வைத் தலை​வரின் இருக்​கையை முற்றுகை​யிட்டு எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கோஷமிட்​டனர். அப்போது அவர்​கள் காகிதங்​களை கிழித்து வீசி​யெறிந்​தனர்.

இதையடுத்து மக்​களவை​யில் அத்​து​மீறி நடந்து கொண்​ட​தாக 374வது பிரி​வின் கீழ் 8 எம்​பிக்​கள் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர். இதன்​படி தமிழக எம்​பிக்​கள் மாணிக்​கம் தாகூர், வெங்​கடேசன் மற்​றும் ஹிபி ஈடன், குர்​ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்​டி, பிர​சாந்த் படோல், டீன் சூரியகோஸ் ஆகியோர் கூட்​டத் தொடர் முழு​வதும் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர். இந்த சூழலில் பட்​ஜெட் கூட்​டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 9-ம் தேதி தொடங்​கியது.

சமையல் காஸ் தட்​டுப்​பாடு, எம்​பிக்​கள் சஸ்​பெண்ட் உள்​ளிட்ட பல்​வேறு விவ​காரங்​கள் தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் அமளி​யில் ஈடு​பட்டு வந்தனர். இந்த சூழலில் மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்லா நேற்று முன்​தினம் அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்​தி​னார். அப்​போது மக்​களவையை சுமுக​மாக நடத்​து​வது குறித்து விரி​வாக ஆலோ​சிக்​கப்​பட்​டது. இதன் ஒரு பகு​தி​யாக 8 எம்​பிக்​களின் சஸ்​பெண்ட் உத்​தரவை ரத்து செய்ய ஒரு​மன​தாக முடிவு எடுக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து மக்​களவை நேற்று காலை கூடியது. அப்​போது 8 எம்​பிக்​களின் சஸ்​பெண்ட் உத்​தரவை ரத்து செய்​யக் கோரும் தீர்மானத்தை நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு தாக்​கல் செய்​தார். இந்த தீர்​மானம் ஒரு​மன​தாக நிறைவேற்​றப்​பட்​டது.

இதன்​படி தமிழக எம்​பிக்​கள் மாணிக்​கம் தாகூர், வெங்​கடேசன் உட்பட 8 எம்​பிக்​களின் சஸ்​பெண்ட் உத்​தரவு ரத்து செய்யப்பட்டது. அவர்​கள் நாடாளு​மன்ற வளாகத்​தில் உள்ள மகாத்மா காந்​தி​யின் சிலைக்கு மரி​யாதை செலுத்​தி​விட்டு அவை நடவடிக்​கை​களில் பங்​கேற்​றனர்.

இது குறித்து காங்​கிரஸ் எம்பி சசி தரூர் நாடாளு​மன்ற வளாகத்தில் நிருபர்​களிடம் கூறும்​போது, “இது நல்ல முடிவு. சஸ்பெண்ட் பிரச்​சினைக்கு சுமுக தீர்வு காணப்​பட்டு உள்​ளது” என்று தெரி​வித்​தார்.

காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் பிரி​யங்கா காந்தி கூறும்​போது, “இது வரவேற்​கத்​தக்க முடிவு. எதிர்க்​கட்​சிகள் மட்​டுமன்றி ஆளும் கட்சி எம்​பிக்​களும் அவை​யில் கண்​ணி​யத்தை கடைப்​பிடிக்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

பாஜக எம்.பி ரவி கிஷண் கூறும்​போது, “மக்​கள் நலன் சார்ந்த பிரச்​சினை​களை மட்​டுமே அவை​யில் பேச வேண்​டும். அவை​யில் ஆக்​கப்​பூர்​வ​மான வி​வாதங்​கள் மட்​டுமே நடை​பெற வேண்​டும். தனி​நபர் தாக்​குதல்​களை தவிர்க்​க வேண்​டும்​” என்​று தெரிவித்தார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here