சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ் 5 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று டி 20 தொடரில் சூர்யகுமார் யாதவ் முதல் 3 ஆட்டங்களில் முறையே 32, 82, 57 ரன்கள் சேர்த்திருந்தார். இதன் மூலம் அவர், தரவரிசையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளார். தொடக்க வீரரான அபிஷேக் சர்மா முதலிடத்தில் தொடர்கிறார். திலக் வர்மாவும் 3-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது டி 20 போட்டியில் 32 பந்துகளில் 76 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் மீண்டும் தரவரிசை பட்டியலுக்குள் வந்துள்ளார். அவர், 64-வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டரான ஷிவம் துபே 9 இடங்கள் முன்னேறி 58-வது இடத்தை பிடித்துள்ளார். ரிங்கு சிங் 13 இடங்கள் முன்னேறி 68-வது இடத்தை அடைந்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரரான இப்ராகிம் ஸத்ரன் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தையும், மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 3 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தையும், டார்விஷ் ரசூலி 29 இடங்கள் முன்னேறி 87-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 9 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை அடைந்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் மார்க்ரம் 47 பந்துகளில், 86 ரன்கள் விளாசியிருந்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பிரண்டன் கிங் 15 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தையும், நியூஸிலாந்தின் கிளென் பிலிப்ஸ் 18 இடங்கள் முன்னேறி 44-வது இடத்தையும் பிடித்தனர். டி 20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 4 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை அடைநதுள்ளார். ரவி பிஷ்னோய் 13 இடங்கள் முன்னேறி 19-வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி தொடர்கிறார்.