ஜம்மு காஷ்மீரில் 8 இடங்களில் திடீர் சோதனை

0
12

கடந்த 2022-ம் ஆண்டு காஷ்மீரை சேர்ந்த முகம்​மது ஷரீப் ஷா என்​பவர் ஜம்​மு​வில் உள்ள முன்​னாள் அமைச்​சர் ஜதீந்​தர் சிங் என்​கிற பாபு சிங்​கிடம் ரூ.6.9 லட்​சம் ஹவாலா பணத்தை கொடுக்க முயன்​ற​போது போலீ​ஸாரிடம் பிடிபட்​டார்.

இந்​தப் பணம் இந்​தி​யா​வில் போதைப் பொருள் விற்​பனை மூலம் ஈட்​டப்​படு​வதும் பிரி​வினை​வாத மற்​றும் தீவிர​வாத செயல்​களுக்கு பயன்​படுத்​தப்​படு​வதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்து பாபு சிங் ஏப்​ரல் மாதம் கைது செய்​யப்​பட்​டார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் தொடர்​புடைய சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் பாபு சிங்​கின் வீடு உட்பட 8 இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here