நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 11 வருடம் ஆன நிலையில் இப்போது, மறு எடிட் செய்து, மீண்டும் வெளியிட உள்ளதாகத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘பாட்ஷா’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சச்சின்’, உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றதால், ‘அஞ்சான்’ படத்தையும் இப்போது வெளியிட உள்ளனர்.