மேற்கு வங்க இறுதிப் பட்டியலில் வாக்காளர்களை சேர்க்க சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
11

மேற்கு வங்க மாநில முதல்​வர் மம்தா பானர்ஜி உள்ளிட்​டோர் தாக்​கல் செய்த மனுவை விசா​ரித்த உச்​ச நீதிமன்றம், மேற்கு வங்​கத்​தில் எஸ்​ஐஆர் வாக்​காளர் பட்​டியலில் முரண்​பாடு​கள் சார்ந்த கோரிக்​கை, ஆட்​சேபனை மனுக்​களை பரிசீலிக்க மாவட்ட நீதி​சார் அலு​வலர்​களை நியமித்து கடந்த 20ம் தேதி உத்​தர​விட்​டது.

மேற்கு வங்க அரசுக்​கும் தேர்​தல் ஆணை​யத்​துக்கும் இடையே ஏற்பட்ட நம்​பிக்​கையற்ற நிலை​யில் இந்த ஏற்​பாட்டை செய்துள்ளதாக தெளிவுபடுத்​தி​யது. கூடு​தலாக ஜார்க்​கண்ட், ஒடிசா நீதி​சார் அலு​வலர்​களை நியமித்துக் கொள்​ள​வும் அனு​மதி வழங்கியது.

இது தொடர்​பாக ஜார்க்​கண்ட், ஒடிசா உயர் நீதிமன்றங்​களின் தலைமை நீதிப​தி​களிடம் கேட்டு பெற​வும், இவ்வாறு நியமிக்​கப்​படும் மாவட்ட நீதி​சார் அலு​வலர்​கள் மூன்று ஆண்​டு​களுக்கு மேலாக அனுபவம் பெற்​றவர்​களாக இருக்க வேண்​டும். இவர்களுக்கான செல​வினங்​களை தேர்​தல் ஆணையமே ஏற்க வேண்​டும் என்​றும் தெரி​வித்​தது.

மேற்கு வங்க எஸ்​ஐஆர் வாக்​காளர் பட்​டியலில் முரண்​பாடு​கள் சார்ந்து பிப்​.14-க்கு முன் பெறப்​பட்ட கோரிக்​கை, ஆட்​சேபனை மனுக்​களை பரிசீலிக்க வேண்​டும்.

வாக்​காளர் இறு​திப் பட்டியலை பிப்​.28ல் வெளி​யிட வேண்​டும் என்​றும், மேலும் துணை பட்​டியலில் இடம்​பெறும் வாக்​காளர்​களின் பெயர்​கள் இறுதி பட்டியலில் இடம்​பெறும் என்று தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்​ச நீ​தி​மன்​றம்​ உத்​தர​விட்​டுள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here