கேரளாவில் அரசுத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நவகேரளா குடிமக்கள் திட்டம் தொடங்கப்பட்டது.
இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
தேர்தலுக்கு முன்னதாக, அரசியல் பிரச்சாரத்தைப் போன்ற ஒரு பெரிய அளவிலான (வீடு வீடாக) ஆய்வுக்கு பொது நிதியையும், அரசு இயந்திரங்களையும் பயன்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இது குறித்து பதில் அளிக்க மனுதாரர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.














