போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக, ஆபாத் ஹர்ஷ்த் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இவரது மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘வளர் இளம் பருவத்தினர் இடையே சம்மதத்துடன் நடைபெறும் உறவில் போக்சோ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. போக்சோ சட்டப் பிரிவுகள் குறித்து சிறுவர், ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது’’ என்று தெரிவித்தனர்.














