கோமாவில் 13 ஆண்டாக இருப்பவரை கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி

0
25

டெல்லி அருகே காஜி​யா​பாத் பகு​தியை சேர்ந்​தவர் ஹரிஷ் ராணா. சண்​டீகரில் உள்ள பஞ்​சாப் பல்​கலைக் ​கழகத்​தில் பி.டெக் படித்து வந்​தார்.

இவர் தங்​கி​யிருந்த விடு​தி​யின் 4-வது மாடியி​லிருந்து கடந்த 2013, ஆகஸ்ட் 20ம் தேதி தவறி விழுந்​தார். இதில் அவருக்கு நரம்​பிழைத் தண்​டில் காயம் ஏற்​பட்​டது.

சிகிச்​சைக்​குப் பிறகும் நினைவு திரும்பாத நிலை​யில், மருத்​துவ ரீதி​யில் உணவும், நீரூட்டமும் அளித்​தும் தொண்​டை​யில் சுவாச குழாய் பொருத்தியும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்​தது. படுத்த படுக்கையாக இருக்​கும் அவருக்கு இடையில் வலிப்பு நோய், படுக்கை புண் ஏற்​பட்டு அதற்​கும் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வந்தது.

13 ஆண்​டு​களாகப் பல்​வேறு சிகிச்​சைகள் அளித்​தும் நினைவு திரும்​பாததை கருத்​தில் கொண்ட பெற்​றோர்​கள் மகனை கருணைக் கொலை செய்​யக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுவை நீதிப​தி​கள் ஜே.பி.​பார்​தி​வாலா, கே.​வி.​விஸ்​வ​நாதன் அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது.

இந்த விவ​காரத்​தில் நோயாளி ஹரிஷ் ராணா​வின் உடல்​நிலையை ஆய்வு செய்ய அமைக்​கப்​பட்ட முதல் ​நிலை, 2ம் நிலை மருத்​து​வக் குழுக்​களும் மருத்​துவ ரீதி​யில் உணவும் நீரும் அளித்து வரு​வதை நோயாளி​யின் நலன் கருதி விலக்க வேண்​டும் என்று பரிந்​துரைத்​தன.

இதைக் கருத்​தில் கொண்ட உச்ச நீதி​மன்​றம் நேற்று அளித்த தீர்ப்பில் கூறி​யிருப்​ப​தாவது: ஹரிஷ் ராணா​வின் உடல் நிலையை ஆய்வு செய்ய அமைக்​கப்​பட்ட முதல்​நிலை, 2-ம் நிலை மருத்​து​வக் குழுக்​களும் உயிர் காக்​கும் கருவி​களை விலக்க பரிந்​துரைத்த பிறகு, நீதி​மன்​றம் தலை​யிட வேண்​டிய அவசி​யம் எழவில்​லை. இருப்​பினும் முதல் நிகழ்வு என்​ப​தால், நோயாளிக்கு பொருத்தப்பட்ட உயிர் காக்​கும் கருவி​களை கண்​ணி​யத்துடன் விலக்க வேண்டும்.

முதல்​நிலை, 2-ஆம் நிலை மருத்​து​வக் குழுக்​கள் பரிந்​துரைத்​து, இது​போன்ற உயிர் காக்​கும் கருவி​களை விலக்கி கருணைக் கொலை செய்​யக் கோரும் விவ​காரத்​தில், காமன் காஸ் வழக்​கின் தீர்ப்​பின் வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி மருத்​து​வ​மனை​களிடம் இருந்து தகவல்​களைப் பெற வேண்​டும் என்று அனைத்து நீதித்துறை நடு​வர்​களுக்​கும் உயர் நீதி​மன்​றங்​கள் உத்​தர​விட வேண்​டும்.

கருணைக் கொலை விவ​காரத்​தில் பரிந்​துரைகளை அளிக்க அனைத்து மாவட்​டங்​களி​லும் முதல்​நிலை, 2-ம் நிலை மருத்​து​வக் குழு​வுக்​குப் பதிவு​ பெற்ற மருத்​து​வர்​களின் பட்​டியலை மாவட்ட தலைமை மருத்​துவ அதி​காரி பராமரிப்​பதை மத்​திய அரசு உறுதி செய்ய வேண்​டும். கருணைக்கொலை விவ​காரத்​தில் மத்​திய அரசு விரிவான சட்​டம் இயற்ற பரிந்​துரைக்​கிறோம். இவ்​வாறு தீர்ப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

கருணை கொலையில் 2 வகை: குணப்​படுத்த முடி​யாத நோயால் நீண்​ட​ காலம் அவதிப்​படும் நோயாளியை, அவருக்கு வழங்​கப்படும் உயிர்​ காக்​கும் மருத்​துவ உபகரணங்​களை நீக்​கு​வதன் மூலம் அல்​லது மருத்​துவ சிகிச்​சைகளை நிறுத்​து​வதன் மூலம் தாமாக உயி​ரிழக்​கச் செய்​வது ‘பாசிவ் யூதனேசி​யா’ எனப்படும் கருணைக் கொலை​யாகும்.

இதை உரிய வழி​காட்​டு​தல்​களு​டன் மேற்​கொள்ள சட்​டப்​பூர்வ அனு​மதி உண்​டு. இது​போன்ற நோயாளி​களை நோயிலிருந்து நிரந்​தர​மாக விடுவிக்​கும் வகை​யில் உயி​ரிழக்​கச் செய்​யும் மருந்தை ஊசி மூலம் மரணமடையச் செய்​வது ‘ஆக்​டிவ் யூதனேசியா’. மற்​றொரு வகை கருணைக் கொலை​யாகும். இந்த நடை​முறை இந்​தி​யா​வில் சட்ட விரோத​மாக கருதப்​படு​கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here